குழந்தைகளும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டுதான். அம்மா ஆயிரம் விஷயங்களை எண்ணி குழம்பித் திரிந்தாலும் குழந்தை அவளின் கால்களை கட்டிக்கொண்டு விளையாடத்தான்
செய்யும். குழந்தைகளின் விளையாட்டில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி உண்டு. 6 மாதக் குழந்தை கை, கால்களை மட்டுமே ஆட்டி விளையாடும். ஆனாலும் பேசத்தெரியாத அந்தக் குழந்தையிடம் தன்னையே மறந்து பேசிக் கொண்டு மற்ற எல்லாக் கவலைகளையும் மணிக்கணக்கில் மறந்துவிடும் பெற்றோர்தானே எல்லோருமே!
புன்சிரிப்புடன் கொழுகொழுவென்று இருக்கும் குழந்தைகள் விளையாடும்போது மேலும் அழகாகிவிடுகிறார்கள். விளையாட்டின் மூலம்தான் அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். விளையாட்டால் அவர்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கைகளையும், கால்களையும் ஊன்றி தவழ்ந்து வரும் குழந்தையை பெற்றோர்கள் கைதட்டி `வா…வா…’ என்று உற்சாகமாக அழைப்பார்கள். சிரித்துக் கொண்டே வேகமாகத் தவழத்தொடங்கும் குழந்தை வெகுசீக்கிரமே எழுந்து நடக்கத் தொடங்கிவிடும். வாழ்க்கையிலும் இப்படித்தான் விளையாட்டு உங்கள் குழந்தையை வேகமாக உயரச் செய்யும்.
பிறந்த 3 மாதத்திலேயே குழந்தைகள் விளையாடத் தொடங்கிவிடும். 6 மாதம் வரை ஒலியெழுப்பும் பொம்மைகள், அசையும் பொருட்களே இவைகளின் விளையாட்டுத் தோழன். இந்த வயதுக்கு குழந்தைகள் விளையாட்டுச் சாமான்களை பற்றிப்பிடிக்க முயற்சி செய்யும். சத்தம் வரும் திசையில் திரும்பிப் பார்க்கும். பொருட்களை பின்பக்கமாக வைத்துவிட்டால் உருண்டோ, திரும்பியோ பொருளை பார்க்கும். இந்த விளையாட்டுகளால் குழந்தைகள் சுற்றுச்சூழலை கவனிக்கத் தொடங்குகின்றன. மூளைவளர்ச்சி அதிகமாகும். ஒளிரும் செல்போன்கள் இந்தக்கால குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.
6 முதல் 10 மாதம் வரை உள்ள குழந்தைகள் புதிய புதிய பொம்மைகளைகளுடன் விளையாட பிரியப்படும். விசை கொடுப்பது, பட்டன் அழுத்துவதன் மூலம் இயங்கும் பொம்மைகளிடம் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பொம்மைகளுடன் விளையாட விரும்பும். அவற்றை தானே இயக்கிவிடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இது தவழும் பருவம் என்பதால் இயங்கும் பொம்மைகளை பின்தொடர முயற்சிப்பார்கள். இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை முந்தைய நிலையைவிட வேகப்படுத்தும்.
ஒன்றேகால் வயது வரையுள்ள குழந்தைகள் நகரும் பொம்மைகளைப் பின்தொடர்ந்து செல்வார்கள். தள்ளுவண்டியின் மூலம் நடை பழகுவார்கள். மற்ற குழந்தைகளின் பின்னால் செல்லத் தொடங்குவார்கள். டப்பாக்களில் மணல் சேகரித்தல், சிதறிய பொருட் களை அடுக்குதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வயதில்தான் கதைகேட்கும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்போது கதை சொல்லி வளர்க்கத் தொடங்கினால் உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வளருவார்கள். இது அறிவு, உடல்வளர்ச்சியின் முக்கியமான பருவம். இதற்கு விளையாட்டு மிக மிக அவசியம்.
2 வயது வரையுள்ள குழந்தைகள் அறிவுத்திறன் விளையாட்டுகளை கற்றுக் கொள்ளும். பல நிறங்களை அடையாளம் காட்டும், புகைப்படங்களில் இருக்கும் நபர்களைக் கேட்டாலும் காட்டிவிடும். பொம்மைகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும். பந்து எறிவது, குழாயைத் திருப்புவது போன்ற சிறு பணி சார்ந்த விஷயங்களையும் செய்யும். ஓடி ஆடி விளையாடுவதால் கால்களும், உடலும் பலம் பெறும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்வார்கள்.
2-3 வயது குழந்தைகள் விளையாடச் சென்றுவிட்டு சரியாக வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பந்தை உதைப்பார்கள், பிடிப்பார்கள். தடுமாறாமல் ஓடிவிளையாடுவார்கள். மணலில் வீடுகட்டி விளையாடுவது, டயரை உருட்டி விளையாடுதல், சுவர்கள், பெஞ்சுகளில் ஏறி விளையாடுவது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த விளையாட்டுகளால் உடல் பலம் பெறும். பல குழந்தைகளுடன் விளையாடுவதால் அறிவு வளர்ச்சி வேகமாக இருக்கும். போட்டோவில் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடும்.
குழந்தைகள் விளையாட்டின் மூலம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் ஏராளம். அவர்களின் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது. சுற்றுச்சூழலை உணர்ந்து கொள்கிறார்கள். அறிவுத்திறன் வளர்கிறது. நண்பர்கள், பாசம், பிரிவு, வெற்றி, தோல்விகளை அறிந்து கொள்கிறார்கள். சமூகத்தை புரிந்துகொள்ளுதல் மற்றும் சமூக அக்கறை வளர்கிறது. அதிகம் அடாவடி செய்வதாக நினைத்து பெற்றோர் குழந்தைகளின் விளையாட்டிற்கு தடை விதிக்கக்கூடாது. அவர்களின் சிறுசிறு வெற்றிகளையும் ஊக்குவித்து பாராட்டினால் அவர்கள் வெற்றியாளர்களாக வளருவார்கள்.
Thursday, December 23, 2010
Friday, September 24, 2010
அம்மாவை தங்களது ‘ரோல் மாடல்’ ஆக குழந்தைகள் பார்க்கின்றனர்.
குழந்தைகள் படிப்பில் தந்தையை விட தாயின் வழியை பின்பற்றுகின்றன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபற்றி இங்கிலாந்தில் பேராசிரியர் அயன் வாக்கர் தலைமையில் நடந்த ஆய்வில் வெளியான தகவல்கள்:
பொதுவாக குழந்தைகள் அம்மாவின் நிழலில் வளர்வதால் அவரிடம் ஈர்ப்பு அதிகமாகிவிடுகிறது. அப்பாக்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வதாலும், பெரும்பாலும் வீட்டில் இல்லாமல் போவதும் தாயின் தயவை தேடி குழந்தைகள் செல்ல காரணம். சிறு வயதில் ஏற்படும் இதுபோன்ற தாக்கங்கள் பெரியவர்களானாலும் மனதில் பதிந்து விடுகின்றன.
அம்மாவை தங்களது ‘ரோல் மாடல்’ ஆக குழந்தைகள் பார்க்கின்றனர். அம்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவர்களை கவர்கிறது. இது படிப்பிலும் பிரதிபலிக்கிறது. இதோ, லண்டனில் 13 ஆண்டுகள் 43,000 இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இதுதான் வெளிப்பட்டுள்ளது.
‘குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது, குடும்பத்துக்குள் தங்களது சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வது உட்பட எல்லாவற்றிலும் அம்மாவின் பிரதிபலிப்பு வெளிப்படுகிறது. இந்த விஷயத்தில் தாய், மகள் உறவு மிகவும் வலிமையாக உள்ளது.
ஆனால், தாய், மகன் உறவில் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது. அம்மாவை விட அப்பா அதிகமாக படித்திருந்து, அதிகமாக சம்பாதித்தாலும் அம்மாவின் படிப்பும், செயல்களும்தான் குழந்தைகளுக்கு பிடித்து விடுகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகள் அம்மாவை பின்பற்ற பாலின சமத்துவமும் ஒரு காரணம்’ என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு இசை அதிக நன்மை அளிக்கிறது.
இசையானது குழந்தைகளின் மூளை ஒலி நுண்ணுணர்வுத் திறனை அதிகரிக்கிறது, அதன் மூலம் அவர்களது மொழியைக் கற்கும் திறனை மேம்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொழியறிவு என்கிறபோது அதில் பேச்சும் அடக்கம். இது தொடர்பான ஆய்வை அமெரிக்காவின் சிகாகோ நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் மேற்கொண்டனர்.
அதில், மூளையின் அறிவு வளர்ச்சி நிலையில் இசையானது அதிகப் பலனளிப்பதாகக் கண்டறிந்தனர். அதிலும் குழந்தைகளுக்கு இசை அதிக நன்மை அளிக்கிறது. குறிப்பாக, கற்றல் குறைபாடு மற்றும் `ஆட்டிச’ பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு. இசைத் திறனுக்கும், இசை முறைமைகளைக் கிரகிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இசைக் கருவியை வாசிப்பது, மொழியைக் கற்கும் குழந்தையின் திறனில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதும் தெரியவந்திருக்கிறது.
ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்த பேராசிரியை நினா கிராஸ் கூறுகையில், இசைக் கருவியை வாசிப்பது, மூளைத் தண்டின் தானியக்கச் செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளையின் கீழ்ப் பகுதியான இது, சுவாசித்தல், இதயத் துடிப்பு, ஒலிகளுக்கான `ரியாக்ஷன்’ ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிப்பதாகும். அவர் மேலும் கூறுகையில், “இசை வாசிப்பது, ஒலி சம்பந்தப்பட்ட திறனைத் தூண்டி வளர்க்கிறது. அதாவது ஒருவரது சொந்த இசைக் கருவியின் ஒலி, அதன் இனிமை, `ரிதம்’ ஆகியவற்றை ஈர்க்கும் திறனை.
இது, சத்தமான வகுப்பறைகளில் பேச்சை வளர்த்துக் கொள்வதற்கு குழந்தைகளுக்கு உதவும். குரலில் சிறுசிறு மாற்றங்களை, ஏற்ற இறக்கங்களை செய்வதன் லம் குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்துவது என்ற பேச்சு ணுக்கத்தைத் துல்லியமாக அறிய குழந்தைகளுக்குக் கை கொடுக்கும்” என்று விளக்கமாகத் தெரிவிக்கிறார். `ஆட்டிசத்தால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகள் இசைக்கு நன்றாக பதில் செயல்பாட்டைக் காட்டுகிறார்கள், அவர்கள் இசையை விரும்புவது நன்றாகத் தெரிகிறது என்று அமெரிக்க `ஆட்டிச’ கழகத்தின் பேச்சாளர் பெண்மணி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “குழந்தைகள் தொடர்புகொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் கலந்துரையாடவும், `ரிலாக்ஸ்’ ஆகவும், உணர்வுகளையும் வெளிப்படுத்தவும் இசை உதவுகிறது என்பது தெரிகிறது” என்றார். இசைக்கு பல இனிய, நன்மை தரும் தன்மைகள் உண்டு, நோயாளிகளுக்கு நலமளிக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அது குழந்தைகளின் மொழியறிவை, மொழித் திறனை வளர்க்கவும் உதவுகிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

Thursday, August 26, 2010
குரலிசை மூலம் நோய்களைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை – யாழ்.ஆஸ்பத்திரியில்
இன்றைய நவீன உலகிலே விஞ்ஞானம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கேற்றாற் போல விதம் விதமான நோய்களும் பல்வேறு பெயர்களில் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகள், வறியநாடுகள் என்ற பேதமில்லாமல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பன இந்த நோய்கள்தான்.
எல்லா நாடுகளுமே தமது மக்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்கென ஆண்டுதோறும் பெருந்தொகைப் பணத்தை ஒதுக்குகின்றன. ஏராளமான மருந்து வகைகள் தயாரிக்கப்படுகின்றன. புதுவகை மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் வித்தியாசமான பெயர்களில் நோய்களும் தோற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன.சித்த, ஆயுள்வேத மருந்துருகளின் பாவனை புறமொதுக்கப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பாவனையால் பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதைவிட தரமற்ற மருந்துகளின் பாதிப்பு வேறு. இதனால் மருந்துகளின்றி நோய்களைக் குணமாக்க முடியாதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு மெல்லிய ஒளிக்கீற்றாக ஒரு விடையும் கிடைத்துள்ளது. அதுதான், இசை மருத்துவம். ஆனால் இது எமக்கெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தவே செய்யும். அதற்கு வலுவான காரணமும் உண்டு. இந்த இசை மருத்துவம் பற்றிய செய்தி எமது நாட்டிலே எப்போதுமே கேட்டிராத ஒன்று. ஆனால் நோர்வே நாட்டில் தோன்றிய இந்த மருத்துவ முறையானது ஏனைய ஸ்கன்டிநேவியநாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா எனப் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் வியாபித்து வருகின்றது. மருந்து இல்லை, மாத்திரை இல்லை, வலிதரும் ஊசி இல்லை, நோய்க்குரிய மருத்துவ இசையைக் கேட்டாலே போதும் நோய் பயந்தோடிவிடும். இந்த ஆச்சரியம் தரும் மருத்துவ முறையை இந்த நாட்டிலே முதன் முதலாக அறிமுகம் செய்த பெருமையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பெறுகின்றது.
இந்த வைத்தியமுறையை வழங்குவதற்கு இந்த நாட்டிலேயே தகுதி பெற்ற ஒருவர் என்ற பெருமையையும் இந்த யாழ்.மண்ணின் மைந்தர் ஒருவரே பெறுகின்றார். அவர் வேறு யாருமல்லர். இசைத்துறையிலே பல உயரிய பட்டங்களைப் பெற்றுள்ள 34 வயதேயான டாக்டர் சிறீரங்கநாதன் தர்ஷனன் தான் அவர். உதயன் பத்திரிகையின் சார்பில் அவரைச் செவ்வி கண்டபோது இசை மருத்துவம் பற்றி இதுவரை தெரிந்திராத பல அரிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. டாக்டர் சிறீ ரங்கநாதன் தர்ஷனன் தமது சொந்த வாழ்க்கை வரலாறு குறித்தும் எமக்கெல்லாம் புதியதொரு விடயமான குரலிசை மூலமான வைத்தியமுறை குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் இங்கே தரப்பட்டுகின்றன. நான் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அப்பா சிறீரங்கநாதன். அம்மா செல்வகௌரி. எனது ஆரம்பக் கல்வியைக் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லூரி ஆகியவற்றிலும் பயின்றேன். நான் யாழ். இந்துக்கல்லூரியில் ஜி.சீ.ஈ உயர்தரத்தில் உயிரியல் பாடப்பிரிவில்தான் முதலில் கற்று வந்தேன். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு இசையின் மீது அடங்காத ஆர்வம் இருந்ததால், உயிரியல் பிரிவிலிருந்து கலைப் பிரிவுக்கு மாறி எனது கல்வியைச் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் பயின்று முடித்தேன். நான் ஒரு மருத்துவராக வேண்டுமென விரும்பிய எனது பெற்றோரும், உறவினர்களும் எனது இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் நான் எனது முடிவை மாற்றவில்லை. இப்போது எனது பெற்றோரின் விருப்பத்திற்கு ஒத்தவாறு ஒரு மருத்துவராகவும் நான் தற்போது ஏற்றம் பெற்றிருப்பது எனது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
அளவெட்டியூர் சிற்றம்பலம் சிவஞானராஜா அவர்களிடம் குருகுலவாசம் செய்து இசையைப் பயின்றேன். அவரும் நான் இசைத் துறையில் தடம் பதிக்கச் சிறப்பான பயிற்சிகளை எனக்கு வழங்கினார். அவரை எனது நெஞ்சம் எப்போதுமே மறக்காது.பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து இசையில் B.Music முதல் வகுப்பில் பட்டம் பெற்றேன். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலே M.Music முதல் வகுப்பிலும் M.Phil Music முதல் வகுப்பு சிறப்பு நிலைத் தேர்ச்சியும் பெற்றேன். இறுதியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலே எனது டாக்டர் பட்டமான PhD Music இணைப் பெற்றேன். பின்னர் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து இசைத்துறையில் B.Music பட்டத்தினைப் பெற்றேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் M. Music, M.Phil Music ஆகிய பட்டங்களை முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சியுடன் பெற்றேன்.
இதன் பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தைப் (Ph.D) பெறும் பொருட்டு இணைந்து எனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன். நான் ஒரு மருத்துவராக உருவாக வேண்டுமென்ற எனது பெற்றோரின் கனவை நனவாக்கும் பொருட்டு எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவும் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற தொலைநோக்குடன் “குரலிசையின் மருத்துவக் குணங்கள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்தேன். இதற்குக் குரலிசை மூலம் நோய்களுக்கு மருத்துவம் செய்யலாம் என்ற எனது அசையாத நம்பிக்கை ஒரு காரணமாகும். எனது ஆராய்ச்சிகளுக்கான வசதிகள் இந்தியாவில் போதியளவு இல்லாமையினால் இங்கிலாந்து சென்று அதனைத் தொடர்ந்தேன். அங்குM.Phil, Ph.D பட்டப்படிப்பை நான் ஆங்கில மொழியில் தொடர்ந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது. வேற்றுமொழி பேசுவோர் இசை மருத்துவத்தைக் கற்பதற்கு எம்மை நாடிவரும் போது அதற்கு ஆங்கில மொழி பேருதவியாக இருக்குமென நான் நம்பியதே இதற்கு முக்கிய காரணமாகும். ஏனென்றால் இந்த மருத்துவ முறைபற்றிக் கேள்விப்படும் தென்னிலங்கை மக்களும், வேறு நாட்டு மக்களும் எம்மை நிச்சயம் நாடி வருவர். மேலும் நான் 1999 இல் யாழ். பல்கலைக் கழக நுண்கலைப் பீடத்தின் குரலிசை உதவி விரிவுரையாளராக இணைந்து இன்று முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இதற்கு மேலதிகமாக யாழ். போதனா வைத்தியசாலையில் வாரத்தில் இரு நாள்கள் (செவ்வாய், வெள்ளி) பி.ப.2 மணி தொடக்கம் 4 மணிவரை மனநல மருத்துவப் பிரிவில் வைத்தியராக சென்ற மாதம் தொடக்கம் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இதற்கான அனுமதியை யாழ்.வைத்தியசாலை மனநல மருத்துவப் பிரிவின் வைத்திய நிபுணர் டாக்டர் சிவயோகன் யாழ்.பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொடுத்தார். அவர் எனக்கு வேண்டிய ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்கி வருகின்றார்.
உளவளம்
பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குவதற்கு அல்லது இந்த நோய் வராமல் தடுப்பதற்கு இசை உதவும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன. உளநலம்
பாதிப்படைந்தவர்களையும், உளநோய்க்கு ஆளானவர்களையும் தனித் தனியாகத் தேர்ந்தெடுத்து பொருத்தமான இசையினைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தலாம் அல்லது ஒருவருக்கு இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
நான் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். எல்லா இசையும் மருத்துவ இசையல்ல. மருத்துவ இசையானது ஆளுக்கு ஆள், சமுதாயத்திற்குச் சமுதாயம், நாட்டுக்கு நாடு, சூழல், மதம், தொழில், மொழி, கல்வியறிவு, ஆண் பெண் வித்தியாசம் என வேறுபடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் வேறு வேறு மருத்துவ இசையைத் தயாரித்துச் சிகிச்சையளிக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு வைத்தியர் எப்படி நோயாளியொருவரின் வாழ்க்கைக் குறிப்பைப் பதிவு செய்தபின் வைத்தியத்தை ஆரம்பிக்கின்றாரோ, அதேபோன்று இசை மருத்து வரும் ஒரு நோயாளி யின் முழு வாழ்க்கைக் குறிப்பையும் நுட்பமான முறையில் பதிவு செய்து சகல விவரங்களையும் சேகரித்துக் கொண்ட பின்னரே ஒவ்வொருவருக்கும் ஏற்ற முறையில் தனித்தனியான மருத்துவ இசையைத் தயாரிக்கின்றார். இதன் பின்னர் சிகிச்சை ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்ட ஒலிப்பதிவு செய்யப்பட்ட மருத்துவ இசை வழங்கப்படும். இதனை ஏனைய வைத்தியர்கள் வழங்கும் மருந்து வகைகளை வேளைக்கு வேளை அருந்துவது போல நோயாளர்கள் கேட்க வேண்டும். இதனை ஒழுங்காக வைத்தியர் குறிப்பிடும் காலம்வரை கடைப்பிடிப்பதன் மூலம் நோயினின்றும் குணமடையலாம்.
மேலும் இந்த இசை மருத்துவம் பக்கவிளைவுகள் ஏதும் விளைவிக்காததோடு, செலவு குறைவானதாகவும், இலகுவானதாகவும் இருப்பதுடன், உலகின் எந்த மூலையில் உள்ள எவருக்கும் இணையதள மூலமாகச் சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ள சிறப்பினைப் பெற்றுள்ளது.
செவ்வி:
ராஜராஜன்
(வளரும்)
நன்றி: உதயன் பத்திரிகை

Thursday, July 29, 2010
தமிழர்களின் உரிமைகளை கனேடிய அரசு மதித்து நடக்க வேண்டும்
கனடா நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படும் தாய்லாந்து சரக்குக் கப்பலான எம்.பி.சன் .சீ இல் பயணிக்கின்ற ஈழத் தமிழர்களின் உரிமைகளை கனேடிய அரசு மதித்து நடக்க வேண்டும் என்று கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனிதாபிமான அமைப்புக்கள் மூன்று கூட்டாகக் கோரி உள்ளன. அகதிகளுக்கான கனேடிய பேரவை, கனேடிய தமிழர் பேரவை, சர்வதேச மன்னிப்புச் சபையின் கனேடிய கிளை ஆகியனவே இவ்வாறு கோரி உள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இத்தமிழர்களைக் கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற இவர்களுக்கு கனடா பாதுகாவலராக மாற வேண்டும் என்றும் இத்தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் இறைஞ்சி உள்ளன. இத்தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று இக்கூட்டு அறிக்கையில் பூடகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

காயங்களும் வலிகளும் நிறைந்து சிதைந்திருக்கிற கிராமம்!
செல்வாநகர் கிராமத்தைப் பற்றி பத்தாண்டுகளுக்கு மேலாக அறிந்திருக்கிறேன். வறுமையும் காயங்களும் மிக்க அந்த கிராமத்தின் ஊடாக ஒரு முறை யுத்தம் நடைபெறும் பொழுது ஓடிக்கொண்டிருந்த ஞாபகமும் எனக்கு வருகிறது.
இப்பொழுது யுத்த காலத்தின் தாக்குதல்களுக்கு உள்ளான அந்த கிராமமும் மக்களும் துயர் தரும் வாழ்விலிருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றனர். இப்படிக் குறிப்பிடும் கட்டுரையாளர் நவராஜ் பார்த்தீபன் போரில் ஊனமடைந்தவர்கள் உட்பட அந்த கிராமத்து மக்கள் சிலரையும் அண்மையில் சந்தித்த பிறகு இந்த விபரணக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
ஊனமடைந்தவர்களின் குடியிருப்பு என்று அந்தக் குடியிருப்பை சுட்டும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அப்படித்தான் அந்த மக்களை எல்லோருமே அழைக்கிறார்கள்.
போராலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஒரு குடியிருப்பாக ஒரிடத்தில் இணைந்து வாழ்கிறார்கள். அவர்களை போர் மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறது. யுத்தம் தீவிரமாக நடைபெற்றன என்பதை சொல்லும் மண்மேடுகள் இன்னும் சனங்களின் காணிகளை ஊடறுத்துச் செல்கின்றன.
செல்வாநகர் கிராமத்தைப் பற்றி சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக அறிந்திருக்கிறேன். குறிப்பாக சிறிய வயதில் அந்த கிராமங்களின் ஊடாக குறுக்கு வழியாக பாவிக்கும் வீதிகளால் பயணங்களை பல தடவை மேற்கொண்டிருக்கிறேன்.
பற்றைகளும் கிடுகு கொட்டில்களும் என்றுதான் கண்ணுக்கு தெரிந்திருக்கின்றன. ஒருமுறை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அந்த கிராமத்தின் ஊடாக ஒரு குறுக்கு வழியாக எதிரிகளின் கண்களில் பிடிபடாதபடி ஓடிய ஞாபகமும் அந்தத் தெருக்களை பார்க்க எனக்கு மீள வந்து கொண்டிருந்தது.
எதிரி பதுங்கியிருக்கும் முடக்குகளோ! என்ற அச்சம் மனதில் குவிந்தன. இப்பொழுது இடுகாடுகளைப்போல யாருமற்ற காணிகளும் யுத்த காலத்தின் மண்மேடுகளும் பதுங்குகுழிகளும் மிதிவெடி அபாயங்களும்தான் பரவிக் கிடக்கின்றன.
யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டதன் காரணமாக பெற்றோர்களுடன் தடுப்பில் இருந்த குழந்தைகளும் அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். அந்த கிராமத்தில் முதல் முதலில் நான் வனசுதன் அன்னலட்சுமி என்பவரை சந்தித்தேன். மட்டக்களப்பை சேர்ந்த அன்னலட்சுமி முன்னாள் போராளியாக இருந்தவர்.
ஆனால் படுகாயமடைந்து ஊனமுற்றதால் போராட்டத்தில் இருந்து 90களில் விலகி குடும்ப வாழ்க்கையை அமைத்த அவரும் அவரது கணவரும் அவரது நான்கு வயதான வேழினியும் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்பில் இருந்த பொழுது வனசுதன் இறந்து போயிருக்கிறார்.
கண்களில் எறிகணைத்துண்டு கிடப்பதினால் வீங்கியிருக்கும் அந்தப் பகுதியை காட்டியபடி தனக்கு உடலில் பல இடங்களில் எறிகணைத்துண்டுகள் இருப்பதாக குறிப்பிட்டார். தற்பொழுது ஒரு காலும் கையும் இயங்குவதில் சிரமங்களை தருவதாகவும் தலை எப்பொழுதும் வலித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்தான் மாற்று வலுவுள்ள அந்த குடியிருப்பிற்கான தலைவியாக செயற்படுகிறார்.
வீடமைப்பதற்காக தரப்பட்ட 5000 ரூபாவில் சில கோழிக்குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அன்னலட்சுமியின் குழந்தை வேழினி தான் பம்பமடு போராளித் தடுப்பு முகாமில் தாயாருடன் தடுக்கப்பட்டிருந்தாக தெளிவாக குறிப்பிடுகிறார். 607 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் இதுவரையில் நான்கு தடவைகளாக மக்கள் மீள குடியிருத்தப்பட்டிருக்கிறார்கள். சில மக்களுக்கு இன்னமும் தகரங்களும் தரப்பாலும் கிடைக்கவில்லை என்று அந்த கிராமத்தின் தலைவர் சு. சுதாகரன் என்னிடம் குறிப்பிட்டார். செல்வாநகர் அ.த.க பாடசாலை என்ற அந்த கிராமத்திற்குரிய பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புக்கள் நடக்கின்றன.
அந்த பாடசாலையில் இருந்த தற்காலிக வகுப்பறைகள் இரண்டு அழிந்து விட்டன. அழிந்த வகுப்பறைக்கு மேலால் தரப்பாலை இழுத்துக் கட்டிக் கொண்டு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கும் ஒரே ஒரு நிரந்தர கட்டிடத்தில் 270 மாணவர்களுக்குரிய வகுப்புக்களை நடத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டில் புறப்பட்ட கணவன் ஜேர்மனியில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உதயகுமரர் தபோநிதி குறிப்பிட்டார்.
43 வயதான இந்த தாயார் இரண்டு கண்களும் பிறப்பிலே பார்வை இழந்தவர். இவரது தங்கையும் ஊனமடைந்தவர். தனது ஒரே பிள்ளையை கல்வி கற்க வைப்பதற்காக மிகுந்த கஷ்டப்படுவதாக அவர் சொன்னார். கால்கள் ஊனமடைந்த மகனின் சைக்கிள் கடையை நம்பி வாழும் பராசக்தியின் குடும்பத்தில் பல துயரங்கள் காணப்படுகின்றன.
ஓமந்தையில் படைகளின் சோதனை நடவடிக்கையின் பொழுது மகன் ஒருவர் காணாமல் போனதாக குறிப்பிடும் பராசக்தி அவனை இராணுவத்தினர் எங்கு கொண்டு போனார்கள்? எனன் செய்தார்கள்? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டபடி தடுப்புமுகாமில் நேரிட்ட கொடுமை தனது கணவரையும் கொன்று விட்டதாக சொன்னார்.
தனது மகளின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லும் அவர் இயக்கச்சியிலிருந்து சூரியக் கதிர் நடவடிக்கையால் இடம்பெயர்ந்தது முதல் பல இழப்புக்களை சந்தித்ததாக குறிப்பிடுகிறார். கால் ஊனமடைந்த அவரது மகன் பக்கத்தில் சிறியளவிலாக சைக்கிள் கடை ஒன்றை போட்டுக் கொண்டு இருந்தார்.
பொக்கணையில் நடந்த எறிகணை வீச்சில் கணவரை இழந்த முருகன் புனவேஸ்வரி 1980இல் இனக்கலவரம் காரணமாக மலையக்கதி்லிருந்து தனது தாய் தந்தையர் இடம்பெயர்ந்து வந்ததாக குறிப்பிட்டார். 30 வயதை உடைய அந்த இளம் தாயிற்கு எட்டு வயதான குழந்தை ஒன்று இருக்கிறது.
இந்த வயதில் என்ன செய்வது? தனது குழந்தை எப்படி வளர்ப்பது? என்றும் அநாதரவாக்கப்பட்டுள்ளதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த பெண் குறிப்பிட்டார். பிறப்பிலேயே கால் இவருக்கு பாதிக்கப்பட்டு விட்டது. போராட்டத்தில் பங்கெடுத்த காலத்தில் தவறுதலாக காயப்பட்ட பொழுது கால் இயங்காமல் இழுத்து விட்டதா குறிப்பிடும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவகுமார் அதற்காக தடுப்பில் வைக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நகரத்தின் கூரையில்லாத சிதைந்த கட்டிடம் ஒன்றிற்குள் இருந்து வாகன இருக்கைகளிற்கான உறைகளை தைத்துக் கொண்டிருந்தார் இராசேந்திரன் புவனேஸ்வரன். வீட்டின் நிலமைகளை பார்க்க பொறுக்காமல் நண்பர்கள் கொடுத்த பழைய தையல் இயந்திரத்தை வைத்து மீண்டும் தனது கணவர் வேலையை தொடங்கியிருப்பதாக லலிதாதேவி குறிப்பிட்டார்.
அந்தப் பழைய இயந்திரம் சிலவேளை பழுதுபடும் பொழுது தானே அதை திருத்தி திருத்தி தைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடும் புவனேஸ்வரன் யுத்தம் காரணமாக தனது வலது காலை இழந்த நிலையில்தான் தைத்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரியளவில் தான் உழைத்து அமைத்த பழைய தையல்கடை குறித்து ஞாபகப்படுத்திய பொழுது அந்த கடை உட்பட எல்லாவற்றையும் தான் இழந்திருப்பதாக குறிப்பிட்டார்.
அவரது பொய்க்காலும் சேர்ந்து தைத்துக் கொண்டிருக்க அவரது துயர நிலையை மீறி புன்னகை நம்பிக்கை தரும் விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படி வலிகளுடன் வாழும் அந்த அந்த மக்களின் குடியிருப்பில் சோபா என்ற தொண்டு நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் ஒன்றிலும் கூரையில்லை. ஒரு கூரையில்லாத கிராமத்தை போல வெயிலில் மக்கள் நனைந்து கொண்டிருக்க எங்கள் வீடுகளுக்கு யாராவது கூரை போட்டுத் தருவார்களா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த மக்கள்.
1995இல் சூரியகதிர் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களிடம் இருந்த எல்லாவற்றையும் வன்னி இறுதி யுத்தம் பறித்து விட்டது. மாடசாமி அம்சவள்ளி என்ற பெற்றோர் இருபது வயதான தங்கள் மகளை காயமடைந்த பொழுது மாத்தளனில் வைத்து இராணுவத்தினரிடம் காப்பாற்றித் தரும்படி கொடுத்தாகவும் பின்னர் அவளுக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்கள்.
அவளை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று தாங்கள் அலையாத இடமில்லை என்றும் அதனால் பைத்தியமான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். மகள் காயமடைந்த இடத்திலேயே தங்கள் மகன் ஒருவர் இறந்து போனதாகவும் ஏற்கனவே ஒரு மகன் போராடத்தில் வீரமரணம் அடைந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள்.
எங்கள் மகள் எங்களுக்கு வேணும் என்று கடுமையாக கோரும் அந்தப் பெற்றோர்கள் தங்கள் இன்னமும் காணியை திருத்தவில்லை என்றும் தங்கள் கூடாரத்திற்கு பாம்புகள் நுழைந்து தம்மை கடித்து கொல்லட்டும் என்றபடிதான் வாழுகிறேன் என் மனதை தகர்க்கும் விதமாக சொல்லி அழுதார்கள். மண்மேடுகளுக்குள்ளாலும் சனங்களற்ற காணிகளுக்குள்ளாலும் செல்லும் பொழுது கூடார முற்றத்தின் முன்பாக உடல் முழுவதும் காயமடைந்த இளம் தாய் கிடந்து கத்திக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரது குழந்தை ஏங்கியபடி நின்றது. முப்பது வயதான அந்தப் பெண் பதுங்குழிக்குள் குடும்பத்துடன் இருந்த பொழுது எறிகணை வந்து விழந்ததில் தங்கம்மா என்ற அந்தப் பெண்ணின் கணவர் சதானந்தனுடன் தங்கம்மாவின் சகோதரர் மற்றும் இரண்டு குழந்தைகளும் பலியாகி விட்டார்கள். தலை கொதிக்கிறது என்றும் வாந்தி வருகிறது என்றும் முற்றத்தில் கிடந்து அவர் கத்திக் கொண்டிருந்தார்.
தங்கம்மாவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் அந்த கிராமத்திலிருந்து அன்று விடைபெற்றேன். தங்கம்மாவை பார்த்துக் கொண்டு எனது பிள்ளையை எப்படியாவது திருத்த வேண்டும். இந்த பிள்ளை சுமக்கும் எறிகணைத்துண்டுகளை எப்படியாவது வெளியில் எடுக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
தங்கம்மாவைப்போல நிறைய மக்கள் உடலாலும் மனதாலும் காயங்களுடன் பாகங்களாகவும் முழுமையாகவும் கழற்றித் திருத்தப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் செல்வாநகர் கிராமம் காயங்களாலும் நீண்டகால மற்றும் யுத்தம் ஏற்படுத்திய வறுமையாலும் மெலிந்து போயிருக்கிறது.
யுத்தத்தினால் அதிகம் சிதைந்து போயிருக்கிறது. இந்தக் கிராமத்தின்மீது அதிகம் அதிகம் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும். போரால் இழப்புக்களுக்கு முகம் கொடுத்த இந்த மக்கள் மீள் வாழ்க்கைக்கு செல்ல வழிகளை ஏற்படுத்த வேண்டிய பெரும் அவசியம் நமக்கு இருக்கிறது.
நன்றி :- குளோபல் தமிழ் செய்தி

Tuesday, June 29, 2010
வளர் இளம் பருவத்தினரின் பாலியல் பிரச்சினைகளும் தீர்வும்
மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக் கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும், நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நலவாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப்பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்கவே செய்யும். உடல் குறை மனதைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதிக்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.
இது தாண்டிய ஆன்மீக உணர்வு என்பது உடலையும், மனதையும் பாதிக்க வல்லது. தெளிவாக சொல்லப்போனால் மாற்றவல்லது என்றாலும் கூட இக்கட்டுரையில் ஆன்மீக தொடர்பு பற்றி நாம் பேசப் போவது இல்லை. அதிலும் குறிப்பாக வளர் இளம் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இங்கு தொட்டுச் செல்லப் போகிறோம். மேலை நாட்டு மருத்துவமான ஆங்கில மருத்துவத்தில் நாம் முன்னர் பேசி ஒருங்கிணைந்த விஷயங்களான உடல் நலம், மனநலம், மூன்றாவதான சமூகநலம் என்ற மூன்றின் ஒருங்கிணைந்த நலப்போக்கு [integrated health perpective] அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆங்கில மருத்துவத்தில் நல வாழ்க்கை எது என்று கேள்வி கேட்கப்படும் பொழுது அது சிக்கலான கேள்வியாக இருக்கிறது.
மனிதர்களின் நல வாழ்வுக்கு பொறுப்புடைய அரசுகள் பெரும்பாலும் மேலை மருத்து வத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்றன. அரசு மருத்துவமனைகள் மேலைநாட்டு தத்துவத்தின் அடிப்படையி லேயே அமைந் திருக்கின்ற காரணத்தினால் பெரும் செலவில் மருத்துவ நிலையங்கள் (மருத்துவ கல்வி + மருத்துவமனைகள்) நடத்தப்படுகின்றன. பல பரிசோதனை ஆய்வுகள், கருவிகள் சார்ந்ததாகவே இருக்கிறது. அதனால் குணப்படுத்துதல் என்பது பணத்தின் அடிப்படையில் அமைந்து விடுகிறது. எல்லா மக்களுக்கும் சென்றடையக் கூடிய மருத்துவம் மாற்று மருத்துவம்தான், ஏனெனில் இது ஒரு ஒருங்கிணைந்த நல வாழ்வு கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.
வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது. இதுவரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத் து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினை கைக் கொள்ள வேண்டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்கு கின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப் படுத்த வேண்டும்.
ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டு வதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமான மன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டு விடும். [Distanting or indifferent attitude] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக் கூடாது. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப் படுத்திக் கொள்ள எண்ணுகின்ற இவர்களின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத்து கின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத்தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.
அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும்பொழுது அதனை காதல் என்றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமாற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர் கள் மாணவர்களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத்தார்க்கு இடையில் ஒருவருக் கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனிதர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என்பதாக மட்டுமே பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவ துண்டு. வளர் இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக்கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு. இவர்களுக் கிடையே ஏற்படக்கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும் போது அது பெருமளவில் பெண்களைத்தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.
அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி விடுவதாகவோ அல்லது திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்துவிடவோ கூடும்.
எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகும். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க்கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என்றாலும் பணி செய் யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தை களிடம் இந்த காதல் வயப்படும் மனநிலை தோன்றும் போது படிப்பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர்கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.
நம்மவர்களிடையே மனநல ஆலோ சனைக்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலையிலேயே இனம் கண்டு கொண்டால் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்துவத்தைவிட ஹோமியோ மற்றும் மலர் மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு என்பதோடு மிகக்குறைந்த செலவிலேயே பூரண மிக்க நலம் பெறலாம்.

தூக்கமே அவர்களுக்கு ஞானம் கிட்டுவதற்கு இயற்கை காட்டிய வழியாகும்
நல்ல சிந்தனைகளும், மன அமைதியுடன் பற்றுகளின்றி வாழ்பவர்களை ஆழ்ந்த தூக்கம் தழுவ ஆம்பிக்கும். இந்த தூக்கமே அவர்களுக்கு ஞானம் கிட்டுவதற்கு இயற்கை காட்டிய வழியாகும். மன அமைதியுடன் தூங்க மூளை நரம்புகளை அமைதிப்படுத்த வேண்டும்.நரம்புகளைத் தூண்டும் காம எண்ணங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றால் தூக்கம் கெடும் வாய்ப்புண்டு. கசகசா, சீரகம், கொத்தமல்லி போன்றவையும், குறைந்த அளவு உணவு, நல்ல எண்ணங்கள், சிறு உடற்பயிற்சி, தியானம் போன்ற அமைதியான தூக்கத்தை அருகில் கொண்டு வருகின்றன.
அதற்கு பதில் வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட தூக்கமுண்டாக்கி மருந்துகளை உட்கொள்வதால் பலஹீனம், சோர்வு, புத்துணர்ச்சியின்மை, ஞாபகமறதி மற்றும் பலவித மருந்தடிமைத்தன்மை ஏற்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தி மன அமைதியை உண்டாக்கும் அழகான மூலிகைதான் பாஸிபுளோரா. பாஸிபுளோரா இன்கார்னேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாஸிபுளோரேசியே குடும்பத்தைச் சார்ந்த பாஸிபுளோராவில் உள்ள ஏபிஜெனின், லுட்டியோலின், குர்சிட்டின், கேம்பரால், ஹார்மின், ஹார்மலின், ஹார்மால், ஹார்மலால் போன்ற வேதிச்சத்துக்கள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மையுடையவை.
குளோனிடின் என்னும் மருந்தைவிட சிறப்பு வாய்ந்தவை பாஸிபுளோரா பூக்கள். உண்பதற்கு சுவையான பாஸிபுளோரா பூக்களிலிருந்து ஜெல்லிகள், ஜாம் தயார் செய்யலாம். பாஸிபுளோரா பூக்களின் பூவிதழ் களை மட்டும் பிரித்து 35 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, 250 கிராம் சீனி சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவு படுக்கும்பொழுது 10 முதல் 15 மில்லியளவு நீருடன் கலந்து சாப்பிட தூக்கம் நன்கு உண்டாகும். மனகுழப்பம் நீங்க பாஸிபுளோரா பழம், பூ மற்றும் இலைகளை நன்கு உலர்த்தி, பொடித்துவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியை 200 மிலி நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி, இரவில் குடிக்கலாம். மலைப்பிரதேசங்களில் பாஸிபுளோரா கொடிகள் அழகுக்காக வேலியோரங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் பழங்களும் சுவையானவை. அவற்றையும் உட்கொள்ளலாம்.

நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டு
நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது. பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில் உட்கொண்டபோது முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் குணமடைகிறார்கள். எலிகளிடம் நடத்திப் பார்த்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக ஜப்பானின் சுஷுகா மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஹிரோமு சாக்குராய் கூறுகிறார்.
பூண்டில் காணப்படும் வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறதாம். இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் கணையநீரில் உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால் அது முதல்வகை நீரிழிவு நோயின் அறிகுறியாகும்.
இந்த நோயாளிகள் இன்சுலினை தினந்தோறும் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும். தசைகள், கொழுப்பு, கல்லீரல் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது. நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை சுரக்கும் சக்தியை கணையம் இழந்துவிடுகிறது.
இந்தவகை நோயாளிகள் மருந்துடன், உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம் வகை நீரிழிவுநோய் எனப்படும். இவர்கள் சாப்பிடும் மருந்துகளால் பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
//
function open_youtube(id){jacCreatForm('open_youtube',id,400,200,0,0,'Embed a YouTube Video',0,'Embed Video');}

சர்க்கரை நோய் – சில பரிமாணங்கள்
சர்க்கரை நோய் (Diabetes) பாதிப்பு அதிகரித்து வருவது (நகர்ப்புறத்தில் நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்தும், கிராமப் புறங்களில் சில மடங்கு அதிகரித்தும்) புள்ளி விபர ஆய்வுகள் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நோய் தடுப்பு முறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல், நோயை ஆரம்ப கட்டத்திலேயே எப்படி கண்டுபிடிப்பது; பின் அதற்காக என்ன செய்வது என சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தடுப்பு வழி முறைகளை கையாளுவதின் மூலம் கூடுதல், நிலைத்த பயன் கிட்டும் என்பது தெளிவு.
சர்க்கரை நோய் ஏற்பட பல விசயங்கள் (பரம்பரை, உடற்பயிற்சி / உழைப்பு குறைவு, அதிகரிக்கும் மன அழுத்தம், கிருமிகள், நச்சு வேதிப் பொருட்களின் பாதிப்பு, உணவு முறை மாற்றம்....) காரணமாக இருக்கும் பட்சத்தில் எதற்கு கூடுதல் / உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதை முற்றிலுமாக தடுக்க / கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
உணவு முறை மாற்றம் - அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல உணவுப் பொருட்களை சாப்பிடும்போது கார்ப்போ ஹைட்ரேட் (மாவுச்சத்து) மட்டும்தான் அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் நிலை தவிர்க்கப்பட்டு, குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகம் இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அரிசி அல்லது மாவுச்சத்துப் பொருட்கள்தான் உணவில் பெரும்பாலான பங்கு வகிக்கிறது என்று ஆகிய பின்பு, அதை செரிக்க ‘இன்சுலின்” (Insulin) எனும் ஹார்மோன் அதிகம் சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் செல்கள் பளு அதிகரித்து அவை விரைவில் இறந்து விடுவதால் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவில் ஏற்படுகிறது.
மேலும் பாரம்பரிய அரிசி வகைகளைக் காட்டிலும் (இவற்றில் மாவுச்சத்து தவிர புரதச் சத்தும் இருக்கத் தான் செய்கிறது) ‘பசுமைப் புரட்சி’யின் காரணமாக கொண்டு வரப்பட்ட புதுவகை அரிசி வகைகளை மட்டுமே அதிகம் உண்ணும் நிலை (இவற்றில் மாவுச் சத்து மிகமிக அதிகமாகவும், புரதத்தின் அளவு மிக, மிகக் குறைவாகவும் இருப்பதால்) ஏற்பட்டுள்ளதால் சர்க்கரை நோயின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுவாக உடலுழைப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திற்கு முன்பைக் காட்டிலும் அதிகமான பாதிப்பிற்கு மக்கள் உள்ளாவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வாழ்க்கை என்பது ஒருவர் அவருக்கான அடிப்படைத் தேவைகளை அவரே முன்வைத்து செயல்படுத்தும் வாய்ப்புகளை / சூழலை முடிந்த வரை ஏற்படுத்திக் கொடுத்தும் தவிர்க்க (முற்றிலு மாக) முடியாத தேவைகளை தொழிற்கூடங்களை / பிறவற்றை சார்ந்து இருக்குமாறு இருப்பது போய் இலாபம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு செயல்படும் தொழிற்கூடங்கள், அதன் பிற அங்கங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த (குறிப்பாக ஏழை, எளிய மக்கள்) மக்கள் நலன்களை காப்பதற்கு பதில் தொழிற்கூடங்களின் நலன்களை மட்டுமே அதிகம் கவனத்தில் கொண்டு, அதிகாரம் படைத்தவர்களுக்கே நன்மை பயந்து வந்துள்ளது வரலாற்று உண்மையாக உள்ளது.
சர்க்கரை நோயை பொறுத்தமட்டில் 1. நோய்தடுப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்காமல், நோய் வந்த பிறகு என்ன செய்வது என்பதை செயல்படுத்தும் திட்டங்களை மட்டும் ஊக்குவிப்பது 2. தனி மனிதன் நோயின் பாதிப்பிலிருந்து விடுபட / கட்டுப்படுத்த வேண்டிய வாய்ப்புகள் / சூழலுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல், தொழிற்கூடங்கள் / வல்லுநர்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும் போக்கே தென்படுகிறது.
ஆக உணவு முறை மாற்றம் (அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துதல்) பாரம்பரிய அரிசி வகைகளை பயன்பாட்டில் கொண்டுவருவது, உடலுழைப்பு / உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பது, அதிகரித்து வரும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த அனைத்து மக்களுக்கான (குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கான) சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் (அனைவருக்கும், நிலம் / வீடு, கல்வி, சுகாதாரம், வேலைக்கு உத்தரவாதம்... போன்றவை) ஆகியவற்றிற்கு உரிய முக்கியத்துவம் வழங்குதல் நடைமுறை படுத்தவேண்டும். அதற்காக பாரம்பரியம், கிருமிகள், நச்சுப்பொருட்களின் பங்கினை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. எந்த செயல்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தால் நீடித்த / நிலைத்த நோய் தடுப்பு / பாதுகாப்பு கண்கூடாகத் தெரியும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

Monday, June 14, 2010
தனிமைக் கூடு… படுத்தும் பாடு…
“இன்னுமா பல்லு தேய்ச்சு முடிக்கல ?…..”
“பால் குடிச்சாச்சா…. ?”
“சீக்கிரம் வா குளிப்பாட்டி உடறேன்..”
“நேரமாச்சும்மா… சாப்பிடு… ஸ்கூல் வேன் இப்ப வந்துடும்…”
“யூனிபார்ஃம் போடு…. ஷூ போடு..ம்ம்….”
பள்ளிக்கூடம் போகும் சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இத்தகைய உரையாடல்களளக் கேட்காமல் இருக்க முடியாது ! அம்மா காலைல எழுந்து குழந்தையை எழுப்பி காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பார். குழந்தையோ அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு போகோ சேனலையோ, டிஸ்கவரி சேனலையோ நைசாக பார்த்துக் கொண்டிருக்கும். அல்லது மம்மி சொன்ன பேச்சைக் கேட்காமல் அங்கும் இங்கும் ஓடியாடி ஒரு குட்டி மானைப் போலத் துள்ளிக் குதித்துத் திரியும்.
ஒரு வழியாக குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, ஸ்கூல் வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி விட்டு அப்பாடா என அம்மா ஹாயாக அமரும்போது தான் அந்த வெறுமை பளாரென கன்னத்தில் அறையும்.
ஐந்து நிமிடத்துக்கு முன்பு வரை ஏக களேபரமாய் இருந்த வீடு இப்போது மிக மிக வெறுமையாய் பயமுறுத்தும். வெறும் கல்லும் மண்ணும் கொண்டு கட்டிய ஒரு கூடாய்க் தோன்ற ஆரம்பிக்கும். அடடா…. எப்போ ஸ்கூல் முடியும், குழந்தை எப்போ வீட்டுக்கு வரும் என ஏங்க ஆரம்பித்து விடும் அந்த பாசமுள்ள மனசு.
“வீட்டை எத்தனை வாட்டி தான் கிளீன் பன்றது ? கழுதைங்க.. ஒரு பொருளையாவது ஒழுங்கா ஒரு இடத்துல வெச்சிருக்குதா?” அம்மாவின் திட்டு தினமும் குழந்தைகளை துரத்தோ துரத்தென்று துரத்தும்.
ஆண்டு இறுதி விடுமுறை வரும். குழந்தைகள் பாட்டி வீட்டிலோ, தூரத்துச் சொந்தக் காரர்கள் வீட்டிற்கோ போகும். இப்போது வீடு ரொம்ப சுத்தமாய் இருக்கும். வைத்த பொருளெல்லாம் அதே இடத்தில் அப்படியே இருக்கும். அம்மாவுக்கு அந்த சுத்தம் மிகப்பெரிய பாரமாகத் தோன்றும். கலையாமல் இருக்கும் பொருட்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். அந்த ஏக்கம் கலந்த வெறுமை அவளை நிலை குலைய வைக்கும். எப்படா குழந்தைங்க திரும்பி வீட்டுக்கு வருமோ.. என மனசு துடிக்கும்.
பிள்ளை வளர்ந்து கல்லூரிக்குப் போகும் காலத்தில் இந்த ஏக்கம் அடுத்த நிலையை எட்டும். அதுவும் தூரமான இடத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கச் சென்று விட்டாலோ, வேலைக்காக வெளிநாடு போனாலோ… அவ்வளவு தான் மனசு ரொம்பவே ஏங்க ஆரம்பிக்கும்.
அதன் பிறகு வரும் திருமணம். ! தனிக்குடித்தனம், அல்லது புகுந்த வீடு இப்படி ஏதோ ஒரு பிரிவு பெற்றோருக்குக் காத்திருக்கும். அந்த நீளமான வெறுமை அசுரத்தனமாக அவர்களைத் தாக்கும். எந்த அளவுக்கு பெற்றோர் குழந்தையை நேசிக்கிறார்களோ அந்த அளவுக்கு வெறுமை அவர்களை ஆட்டிப் படைக்கும். ஒரு வகையில் நியூட்டனின் மூன்றாவது விதி என வைத்துக் கொள்ளுங்கள்.
நேற்று வரை எல்லாவற்றுக்கும் அப்பா, அம்மா என்று நின்ற பிள்ளைகள் இன்று அப்பா அம்மாவை சார்ந்து வாழத் தேவையில்லாமல் கிளம்பி விடும்போது பெற்றோரிடம் உருவாகும் இந்த வெறுமை நிலையை எம்ட்டி நெஸ்ட் சிண்ட்ரோம் என்கிறார்கள். வெறுமைக் கூடு பாதிப்பு என்று தமிழில் சொல்லாமா ? தவறெனில் தமிழறிஞர்கள் மன்னிப்பார்களாக !
இந்த வெறுமையின் உச்சகட்ட நிகழ்வு என்பது பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டு காப்பகங்களிலோ, ஏதாவது அனாதை விடுதிகளிலோ சேர்க்கும் போது நேர்ந்து விடுகிறது. அது மிக மிக அரிதான நிகழ்வு என்பதால் அதைக் கொஞ்சம் ஒதுக்கியே வைக்கலாம்.
வயது ஆக ஆக, இந்த வெறுமையின் ஆழமும் அதிகரிக்கும். முதுமை வயது தனது பிள்ளைகளின் அன்பான கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டில் அமைதியாய் இருக்க பிரியப்படும். துரதிர்ஷ்ட வசமாக பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களை தனியே தவிக்க விடும் பிள்ளைகளையும் வாழ்க்கை ஒரு நாள் அந்த வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என்பது தான் வாழ்க்கையின் பரமபத விளையாட்டு !
இத்தகைய வெறுமை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அதே வீரியத்துடன் தாக்குகிறது. சொல்லப் போனால் ஆண்களை இது கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது. காரணம், குழந்தையுடன் தேவையான அளவு நேரம் செலவிடவில்லையே எனும் ஏக்கம் தந்தைக்கு மிக அதிகம் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் வீட்டென் கல்லூரியில் உளவியல் பேராசிரியராக இருக்கும் ஹெலன் எம். டிவிரிஸ் குழந்தைகள் விலகும்போது நிகழும் வெறுமை இயல்பானது தான். அதைக் கண்டு அதிகம் பயப்படத் தேவையில்லை. எப்போது பயப்படவேண்டும் ?
வாரம் பத்து நாள் அழுதுகொண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த அழுகை வாரக்கணக்கில் நீண்டு கொண்டே இருந்தால் அவர்களைக் கவனிக்க வேண்டும். அது இந்தப் பாதிப்பின் அறிகுறி.
ரொம்ப மன அழுத்தமாக உணர்கிறார்களெனில் கவனிக்க வேண்டும். அது மிகப்பெரிய ஆபத்தான அறிகுறி. யாருடனும் பேசாமல், சமூகத்தை விட்டே கொஞ்சம் விலகி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களெனில் நிச்சயம் கவனிப்பது அவசியம்.
“இனிமே என்னத்த…” எனும் சிந்தனைக்கு வந்து அதையே பேசிக் கொண்டிருப்பவர்களையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்காக வாழ்ந்துட்டோம். அவங்க போயிட்டாங்க, இனிமே நாம என்னத்த பண்ண என தம்பதியராய் சேர்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த சிக்கல் இருக்கக் கூடும் !
இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இந்தச் சிக்கல் எல்லோருக்கும் வந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. சில பெற்றோர் குழந்தைகளை தனியே நிற்கப் பழக்குவார்கள். அவர்கள் பழகிவிட்டால் சந்தோசப்படுவார்கள்.
“அப்பாடா பையனை கரையேத்திட்டேன்”, “அப்பாடா… பொண்ணை வழி அனுப்பி வெச்சுட்டேன்.. இனிமே நிம்மதி” என தங்கள் விருப்பமான வேலைகளைப் பார்க்க உற்சாகமாய்க் கிளம்பி விடும் பெற்றோரும் உண்டு. அவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். அவர்கள் கீழே உள்ளதைப் படிக்காமல் தாவி விடலாம்.
இந்த தனிமைச் சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள்.
1. ஆனந்தம், சோகம், அருகாமை, பிரிவு எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை எனும் உண்மையை மனதில் ஆழமாக எழுதிக் கொள்ளுங்கள். இனிமேல் பிள்ளைகள் நம்மை முழுமையாய் சார்ந்து இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. இனிமேல் வரும் வாழ்க்கை வித்தியாசமானது என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அது அழகானது அல்ல என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்ளும் கற்பனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதுமே அழகானது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கே உரிய சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்கும்.
3. பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போதே, ஒரு நாள் இவர்களெல்லாம் தனியே வாழக் கிளம்பி விடுவார்கள் எனும் எண்ணம் மனதில் இருக்கட்டும். அது தான் வாழ்க்கையின் நியதி என்பதை உங்கள் கடந்த கால வாழ்க்கையே சொல்லியிருக்கக் கூடும்.
4. இன்றைய உலகம் ஹை டெக் உலகம். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். எனவே இ-மெயில், 3G, வெப் கேம் இப்படி எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் உங்கள் தனிமைக்குத் துணையாய் அழையுங்கள்.
5. உங்கள் பழைய ஹாபி ஏதேனும் ஒன்றைத் தூசு தட்டி எடுங்கள். சிலருக்கு எழுதுவது, சிலருக்கு இசை கேட்பது, சிலருக்கு வாசிப்பது, தோட்டம் வைப்பது இப்படி ஏதோ ஒன்று சிந்தனைகளின் பரணில் இருக்கும். அதைத் திரும்ப எடுங்கள். உங்கள் சுவாரஸ்யமான செயல்களைச் செய்யத் தான் இந்த தனிமை தரப்பட்டிருக்கிறது என பாசிடிவ் ஆக நினையுங்கள்.
6. உங்கள் உதவி இல்லாமலேயே உங்கள் பிள்ளையால் தனியே வாழமுடியும், சமாளிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நிலைக்கு உங்கள் பிள்ளைகளை திறமை சாலிகளாக வளர்த்ததில் பெருமிதமும் கொள்ளுங்கள்.
7. உங்களைப் பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கும் வருத்தம் இருக்கக் கூடும். அவர்களை உங்கள் கவலை நிம்மதியிழக்கச் செய்யலாம். எனவே முதலில் உங்கள் கவலைகளைத் தூர எறியுங்கள்.
8. சேர்ந்து வாழும் காலத்திலேயே உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எவ்வளவு தூரம் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள். அது உங்களுடைய குற்ற உணர்வுகள் பலவற்றைத் துடைத்து விடக் கூடும்.
9. இண்டர்நெட்டில் விருப்பம் இருப்பவர்கள் ஒரு பிளாக் ஆரம்பித்து தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். உலகத் தொடர்பும் கிட்டும், தனிமை வாட்டுதலும் நிற்கும்.
10. உங்கள் பழங்கால நண்பர்கள், உங்கள் நலம் விரும்பிகள், உறவினர்கள் இப்படி யாருடனாவது உங்கள் உரையாடல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஆத்மார்த்தமான நட்பும், பேச்சும் கிடைத்தால் வெற்றிடம் நிரம்பிவிடும்.
11. மன அழுத்தமாக உணர்கிறீர்கள். வெளியே வர எவ்வளவு முயன்றும் முடியவில்லை எனில் ஒரு கவுன்சிலிங் நபரைப் பாருங்கள். அதில் வெட்கப்பட ஏதும் இல்லை.
12. விளையாட்டில் ஈடுபாடு உண்டென்றால் ரொம்ப நல்லது. உங்கள் விருப்பத்துக்குரிய விளையாட்டை ஆரம்பிக்கலாம். பலர் கேரம் போன்ற விளையாட்டுகளில் மூழ்கி விட்டால் அவர்களுடைய வெறுமை எல்லாம் பசுமை ஆகிவிடும்.
13. சில திட்டங்கள் வைத்திருங்கள். அடுத்த மாதம் அவரைச் சந்திக்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் அங்கே போகவேண்டும் .. இப்படி. இவையெல்லாம் உங்களை அந்த முடிவுகளை நோக்கி சிந்திக்க வைக்கும். உங்கள் வெறுமையை நிரப்பி விடும்.
14. பிரியமான பார்ட் டைம், ஃபுல் டைம் வேலைகள் ஏதேனும் இருந்தால் தேர்ந்தெடுங்கள். பேபி சிட்டிங் போன்ற வேலைகள் இப்போது நம்பிக்கையான, அன்பான நபர்களுக்காய் காத்திருக்கின்றன.
15. கணவன் மனைவி தனியாய் இருந்தால் ரொம்ப நல்லது. முதுமையின் தனிமையை காதலுடன் அனுபவியுங்கள். காலார வாக்கிங் போவது முதல், காதல் வாழ்க்கையை அசை போடுவது வரை இது உங்களுக்கான வாய்ப்பு என்பதை உணருங்கள்.
16. உங்கள் வாழ்நாள் சாதனைகளை நினைத்து மகிழுங்கள். உங்கள் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்தது ஒரு வாழ்நாள் சாதனை என்பது நினைவில் இருக்கட்டும்
17. அவ்வப்போது தனிமையை நினைத்து சோகமாய் இருப்பதோ, அழுவதோ தப்பில்லை. உணர்வுகள் வெளிப்படுத்துவதற்கானவையே. எனவே நீங்கள் உங்கள் மனசைத் திறப்பதைத் தவறு என கருத வேண்டாம்.
18. தியானம், பயணம், ஆன்மீக ஈடுபாடு போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு தனிமை வரப்பிரசாதம். இந்தத் தனிமையை நீங்கள் கொண்டாடலாம்.
19. பிள்ளைகளுடன் போனில் பேசுங்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருவருக்கும் உடன்பாடான இடைவெளியில் பேசுங்கள். உங்கள் பிள்ளை தினமும் பேச விரும்பினால் தினமும் பேசுங்கள், வாரம் ஒரு முறையெனில் அதையே பின்பற்றுங்கள்.
20. ஓய்வு எடுங்கள். வாழ்க்கையில் ஓடியாடி உழைத்தாகி விட்டது. ஓய்வாய் அமர்ந்து ஒரு படம் பார்ப்பது, இசை கேட்பது, டின்னர் சாப்பிடுவது என வாழ்க்கையை அனுபவியுங்கள்.
21. உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்களைச் சுரக்கச் செய்யும். அது மனதை ஆனந்தமாக வைத்திருக்கும். ஆரோக்கியத்தையும் கூட்டி வரும். எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
22. மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள். இறுக்கமான மனநிலை இல்லாமல் இயல்பாய் இருங்கள்.
23. குற்ற உணர்ச்சிகளை விட்டு விடுங்கள். ஐயோ, குழந்தையை நல்லா கொஞ்சலையே, நிறைய நேரம் செலவிடலையே என்றெல்லாம் புலம்பித் திரியாதீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என மனதை இயல்பாக்குங்கள்.
24. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பிய, ஆனால் செய்ய முடியாமல் போல விஷயங்களை, விருப்பங்களைப் பட்டியலிடுங்கள். இப்போது அதில் எதையாவது செய்ய முடியுமா என யோசியுங்கள்.
25. ரொம்ப பிஸியா இருக்க என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். கணவன் மனைவியாக இருந்தால் இதை எதிர்கொண்டு வெளியே வருவது ரொம்பவே சுலபம். இல்லாவிட்டாலும் கவலையில்லை, வெளியே வருவது எளிது தான்.
இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் தனிமையின் வெறுமை என்பது சாபமல்ல, வரம் என்பதை உணர்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழுங்கள், வாழ்த்துக்கள்.ஃ
சேவியர்
நன்றி : பெண்ணே நீ…

Thursday, June 10, 2010
இனிமையான பொழுதுகள் மீண்டும் வரப்போவதில்லையே
வேலியடைக்க வாறியளோ?.
Author: PRAKASH
•5:54 AM
என்ன மூர்த்தியர் இண்டைக்கு வேலியடைப்போ? ஒழுங்கையால போன சுந்தரம் மாமா கேட்டுக் கொண்டே சைக்கிளை விட்டிறங்கி அருகில் வந்தார். ஒமண்ணை நல்ல நேரத்தில தான் நீங்களும் வந்திருக்கிறியள். வந்து ஒருகை குடுங்கோவன், அதுக்கென்னப்பா நானும் வாறன். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே நானும் வீட்டில சும்மா தான் இருந்தனான். சொல்லிக் கொண்டே சுந்தரம் மாமாவும் அப்பாவும் நானும் கதியால் வேலியில கிடந்த பழைய உக்கிப் போன கிடுகுகளை அறுத்து கொட்டி சுத்தப்படுத்திய பின்னர் வீட்டுக்கு பின்பக்க தாழ்வாரத்தில் அடுக்கி இருந்த கிடுகுகளை எடுத்து கொண்டு வந்து வேலி நீளத்துக்கும் அடுக்கி கொண்டிருக்கிறம்.
யாழ்ப்பாணத்தில் வசதியான ஆக்கள் எண்டால் வீட்டை சுத்தி மதில் எழுப்பியிருப்பினம். சில பேர் எண்ணை பீப்பாய் தகரத்தில வேலி அடைச்சிருப்பினம். நடுத்தர வர்க்க சாதாரண குடும்ப வீடுகளில் சுத்தி கிடுகுவேலியோ பனை ஓலை வேலியோ தான் இருக்கும். என்னதான் வீட்டை சுத்தி மதில் எழுப்பினாலும் அது இயற்கைக்கு மாறான சூழல் தான். கிடுகு,பனை ஓலை வேலி எண்டால் அந்த வீட்டுக்கும் வளவுக்கும் ஒரு தனி களையே வந்த மாதிரி இருக்கும். பனை ஓலையும் தென்னோலையும் யாழ்ப்பாணத்தில இலகுவாய் கிடைக்க கூடிய பொருட்கள் தான். பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒவ்வொருத்தர் வீட்டு வளவிலும் ஒரு அஞ்சு பத்து தென்னை மரமோ, பனை மரமோ கட்டாயம் இருக்கும். எங்கடை வீட்டிலையும் ஒரு ஏழு தென்னை மரம் இருந்ததாய் நினைப்பு. ஒவ்வொரு நாளும் மரத்தில இருந்து விழும் காய்ஞ்ச தென்னோலையை அம்மா இழுத்து கொண்டு போய் கிணத்தடியில போட்டு விடுவா.
குடும்பத்தில எல்லாரினதும் குளிப்பு முழுக்கெல்லாம் அதுக்கு மேல நிண்டுதான் நடக்கும் . அப்பத்தான் ஓலை நல்லா நனையும். காஞ்ச ஓலையில கிடுகு பின்ன முடியாது, நல்லா ஊறவேணும். ஒரு அறுபது எழுபது மட்டை சேர்ந்தாப்போல ஏதாவது ஒரு ஞாயிற்று கிழமை கிடுகு பின்ன முற்றத்தில இறங்கிடுவம். கிடுகு பின்னிறதே ஒரு தனிக்கலை தான். அம்மா பின்னும் போது நானும் முதுகுக்கு பின்னால நிண்டு கொண்டு எனக்கும் கிடுகு பின்ன பழக்கி விடும்படி நச்சரிப்பதுண்டு. நச்சரிப்பு தாளாமல் அவவும் சொல்லி குடுக்க ஏழு வயசிலேயே நானும் நல்லா கிடுகு பின்ன பழகீட்டன். கிணத்தடியில இருந்து நனைஞ்ச தென்னோலையை முற்றத்து மண்ணில இழுத்து கொண்டு வந்து பலகை கட்டையை போட்டு குந்தி இருந்து பின்னும் போது, முற்றத்து புழுதி மண்ணும் நனைஞ்ச ஓலை மணமும் சேர்ந்து கலவையாய் ஒரு அலாதியான வாசம் வரும் பாருங்கோ, அதெல்லாம் அனுபவிக்க குடுத்து வச்சிருக்கோணும்.
பின்னி முடிச்ச கிடுகுகளை பத்திரமா ஓரிடத்தில் பாதுகாப்பா அடுக்கி வச்சு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடுகுகள் சேர்ந்தவுடன் வசந்த கால ஆரம்ப நாளொன்றில் வேலியடைப்பு துவங்கும். வேலியடைப்பு எண்டு சாதாரணமா சொன்னாலும் அதுவும் ஒரு குடும்ப நிகழ்வு மாதிரித்தான். காலைமை இரண்டு பேர் மூன்று பேராக துவங்கும் வேலியடைப்பு நேரம் போக போக, தெரிந்த அயலட்டை சனங்களும், நண்பர்களும் கேட்காமலே உதவிக்கு வந்து சேர, ஒரு கலகலப்பான குட்டி கொண்டாட்டமாகவே மாறி விடும். இரண்டு பேர், வேலிக்கு உள்பக்கம் ஒராள், வெளிப்பக்கம் ஒராள், முதல் வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு போக, அடுத்த இரண்டு பேர் இரண்டாவது வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு பின்னால் வருவர். இதுக்குள் என் வயதொத்த சிறுசுகளின் வேலை கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை.
வேலியடைப்புக்கு பாவிக்கிற குத்தூசி இரண்டு விதம் இருக்கும். சில பேர் மரத்தில செய்து வச்சிருப்பினம். சில பேர் அரை இஞ்சி கம்பியில செய்து வச்சிருப்பினம். கூர்மையாக இருக்கும் பக்கத்தில கட்டுக்கயிறு கோத்து விடக்கூடிய அளவில் சின்னதா ஒரு துவாரம் இருக்கும். வேலிக்கு வெளிப்பக்கம் இருந்து ஒருத்தர் குத்தூசியில கயிற்றை கோத்து வேலிக்கு உள்பக்கம் நிற்கும் எங்களிடம் "ஆ இந்தா" என குரல் கொடுத்தபடி அனுப்ப நாங்கள் கயிற்றை எடுத்து வைத்து கொண்டு குரல் கொடுக்க, அவர் குத்தூசியை எடுத்து கதியாலின் மறுபுறம் குத்த நாமும் கயிற்றை இழுத்து கோத்து விட்ட பிறகு "ஆ சரி" என குரல் குடுக்க மளமளவெண்டு வேலையும் நடந்து கொண்டிருக்கும். ஒரு புறம வேலியடைப்பு நடந்து கொண்டிருக்க, மறு புறம அயலில் யார் வீட்டில் மாடு கன்று போட்டது, ஆடு குட்டி போட்டதிலிருந்து அன்றைய அரசியல் வரைக்கும் அலசல் நடந்து கொண்டேயிருக்கும்.
இடையில் பதினோரு மணியளவில் அம்மா பெரிய பாத்திரத்தில் எலுமிச்சம்பழ தண்ணீருடன் வந்து பரிமாறவும் நேரம் சரியாயிருக்கும். அன்றைக்கு வேலியடைப்புக்கு உதவிக்கு வந்த எல்லோருக்கும் மதிய சாப்பாடும் எங்கள் வீட்டில் தான். இனிமையான பொழுதுகள் மீண்டும் வரப்போவதில்லையே.

சொந்த நாட்டை தவிர வேறெந்த நாட்டிலையும் கிடைக்காத சொர்க்கம்.
மாசிப்பனி மூசிப்பெய்யுது. ஒரு விடிகாலை நினைவு மீட்டல்.
Author: PRAKASH
•8:42 AM
இந்த வசனத்தொடர் ஈழத்து பேச்சு வழக்கில் மாசி மாதங்களில் இடம்பெறும் ஒரு வசனம். வருடத்தின் புரட்டாசி மாசத்தில் ஆரம்பிக்கும் மழை, புதிய வருடம் தை மாசத்தில் ஓரளவிற்கு முடிவிற்கு வந்திடும். அதுக்கு பிறகு பங்குனி வெய்யில துவங்க முன்னம் மாசி மாதத்தின் இரவுகளில் பனி கொட்ட துவங்கி விடும். இரவில் படுக்கைக்கு போகேக்குள்ள தலையணையும், போர்வையும் தலைமாட்டில தான் இருக்கும். பிறகு நேரம் போக போக தலையணை ஒரு பக்கம், போர்வை ஒரு பக்கம், பாய் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் கிடப்பன். பின்னிரவு தாண்டி நிலம் குளிரும்போது தான் தெரியும், நான் அறை முழுக்க பிரதட்டை அடிச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டது.
அதுக்கு பிறகுதான் தலையணை, போர்வை, பாய் எங்கெங்க கிடக்குதெண்டு இருட்டுக்குள்ள கையை காலை போட்டு துழாவி கண்டு பிடிச்சிடுவன். அதுக்குள்ளை அம்மாவிட்டை ஒரு குட்டும், தம்பியிட்டை ஒரு எத்தும் வாங்கியிருப்பன். மெல்ல மெல்ல விடியத்துவங்கும். விடியக்காலம்பிறை நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் எழும்பி படிக்கவேணுமெண்டு அம்மாவின்ரை ஓடர். மீற முடியாது. அந்த பனிக்குளிருக்குள்ளை எழும்ப மனம் வருமே?. அந்த குளிருக்குள்ளை போர்வையின்ரை ஒரு பக்கத்தை நல்ல இறுக்கமா இழுத்து காலுக்குள்ளை வைச்சுக்கொண்டு, இன்னொரு பக்கத்தை இழுத்து தலைமாட்டுக்குள்ளை செருகி, ஒரு கூடாரம் மாதிரி ஆக்கி, குறண்டிக்கொண்டு குறட்டை விடுகிறது ஒரு தனி சுகம் தான். ஆனாலும் அம்மா விடமாட்டா. டேய் எழும்படா எழும்பி படி எண்டு அதட்டிக்கொண்டே இருப்பா. எழும்பாட்டி சிலவேளை நாயே பேயே எண்டு திட்டெல்லாம் கூட விழும்.
திட்டு விழ விழ தான் அந்த பனிக்குளிர் படுக்கை இன்னும் சுகமாய், இன்னும் கொஞ்சநேரம் படுத்திருக்க சொல்லும். அம்மாவின்ரை ஒவ்வொரு அர்ச்சனைக்கும் அங்கை புரண்டு இங்கை புரண்டு சோம்பல் முறிக்கையுக்குள்ளை, சரியா அஞ்சுமணிக்கு வயல்வெளி நடுவுல இருக்கிற ஐயனார் கோவில் மணி அடிக்கவும், வீட்டுச்சாவல் இன்னொருக்கா கூவவும் சரியாயிருக்கும். இனி இதுக்கு மேல படுக்க முடியாது, எழும்பித்தான் ஆகோணும். இல்லையெண்டால் வீட்டில குடிக்க வச்சிருக்கிற ஒரு குடம் தண்ணியால படுக்கையில வச்சே அம்மா குளிப்பாட்டி போடுவா. இருக்கிற குளிருக்கை இந்த வம்பு வேண்டாமே. விடியக்காலமை இருட்டுக்குள்ளை கிணத்தடிக்கு போக முடியாததால, முதல் நாளிரவே ஒரு பெரிய வாளியில தண்ணி எடுத்து கொண்டு வந்து முன்வாசல் படிக்கு பக்கத்தில வச்சிடுவா. பனியோடை பனியாய் அதுவும் சில்லிட்டு போய் இருக்கும்.
வெட வெடக்கிற குளிருக்குள்ளேயே எழும்பி, போட்டிருந்த முழுக்கைச்சுவெட்டரை, கைகள் இரண்டையும் முழங்கை வரைக்கும் இழுத்துப்போட்டு, வாசல் படியில இருந்த தண்ணியில வேகமா வாயை கொப்புளிச்சுக்கொண்டு, இரண்டு மூண்டு தரம் சளார், சளாரெண்டு முகத்தில தண்ணி அடிச்சு கழுவிப்போட்டு, துண்டால துடைச்சுக்கொண்டு உள்ளை போக அம்மா சுடச்சுட ஆட்டுப்பால் தேத்தண்ணி போட்டுத்தர, பனிக்குளிருக்கு சூடான தேத்தண்ணி இதமாய் தானிருக்கும். பிறகென்ன மண்ணெண்ணெய் விளக்கை கொளுத்தி வச்சிட்டு, படிக்க துவங்குவன். என்னதான் அந்த பணிக்குளிருக்குள்ளை எழும்ப பஞ்சிப்பட்டாலும், எழும்பினதுக்கு பிறகு கோயில் மணிச்சத்தத்தையும், விடியக்காலை குருவிகள், பறவைகளின்ரை கீச்சுக்குரல் சத்தங்கள், வீட்டுக்கூரையில இருந்து சேவல் செட்டையை பட படவெண்டு அடிச்சு கூவும் ஒலிகள, எங்கேயோ தூரத்து கோவிலில் கேக்கும் சுப்ரபாதத்தையும் கேட்டுக்கொண்டு அந்த விடிகாலை நேரத்தை அனுபவிக்கிறதில எனக்கு ஒருக்காலும் அலுக்காது.
ம்ம் இனி விடிஞ்சுட்டுது, ஆறரை ஆச்சுது போல. இனி குளிக்கவேணும். எட்டுமணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடவேணும். கையில அண்ணா பல்பொடியையும், துவாய், கைவாளியையும் எடுத்துக்கொண்டு மூலை வளவு கிணத்தடிக்கு போக ஆயத்தமாக, பின்னால அப்பாச்சி " டேய் தம்பி தலையில ஏதாவது துண்டை கட்டிக்கொண்டு போ அப்பு, வெளியில ஒரே பனிப்புகார் மூட்டமாய் இருக்கு. மாசிப்பனி மூசிப்பெய்யுது. குளிர் காதுக்குள்ளை போனால் தடிமன் பிடிச்சிடும்." அப்பாச்சி சொன்ன படி துண்டை கட்டிக்கொண்டு கிணத்தடிக்கு போறன். சுருட்டு குடிக்கிறவையால மட்டும் தான் ஸ்ரைலா சுருள் விட முடியுமே?. எங்களாலயும் முடியும். எப்பிடி எண்டு கேக்கிறீங்களோ? மாசிப்பனியில நல்லா மூச்சை இழுத்து வாயால விட்டுப்பாருங்கோ. உங்கடை வாயில இருந்தும் புகை சுருள் சுருளாய் வெளிக்கிடும். பனிக்காலத்தில எனக்கு பிடிச்ச விளையாட்டுக்களில இதுவும் ஒண்டு. கிணத்தடியில நிண்டு பார்த்தால் முன்னாலை புகார் மூட்டத்தோடை அரிவிவெட்டுக்கு ஆயத்தமாய் மஞ்சள் நிற நெல்கதிர்மணி பாரம் தாங்காமல் தலைசாய்த்து வயல்வெளி பரந்து விரிகிறது. கிழக்கு திக்கில் அடிவானத்தில் சூரியன் சிவப்புக்கோளமாய், பெரிசாய் மெல்ல மெல்ல பனி புகாருக்குள்ளாலை எட்டிப்பார்க்கிறான். அண்ணா பல்பொடியை வச்சு பல் தேச்சுக்கொண்டே சூரிய உதயத்தையும் வடிவாய் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் நிற்கிறது.
அண்ணா பல்பொடி, பல்லு தீட்டிநானோ இல்லையோ அரைவாசி வயித்துக்குள்ளை போயிட்டுது. அவ்வளவு இனிப்பு. இனியும் லேட் பண்ண ஏலாது. அம்மா பூவரசங்கம்போடை வந்தாலும் வந்திடுவா. தண்ணியை அள்ளி தலையில ஊத்தவா, விடவா?. உடம்பெல்லாம் வெடவெடக்குது. டக்கெண்டு ஒரு வாளி தண்ணியை உடம்பிலை ஊத்தினால் எல்லாம் சரியாய் போய் விடும். பனிக்குளிரில கிணத்து தண்ணி சூடும். எப்பிடியோ குளிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்து, ஆறிப்போன தேத்தண்ணியை மடக்குமடக்கெண்டு குடிச்சிட்டு, பாணும் சம்பலும் சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கொண்டு, புத்தக பையையும் தூக்கி சைக்கிள் கரியரில வச்சு கொண்டு, இரண்டு பக்கமும் வயல் நடுவால போற ரோட்டில பள்ளிக்கூடத்துக்கு வேகமாக சைக்கிளை மிதிக்கிறன். காலமை நேர பனிக்காத்து இரண்டு காதுகளிலும் மெல்ல இரைகிறது. பனிப்புகார் இன்னும் கலையவில்லை. இண்டைக்கு பனி கடுமையாய் இருக்கு. வெய்யிலும் நல்ல காட்டு காட்டுமோ?. இண்டைக்கு நாடு விட்டு நாடு வந்தாலும், பனி விழுகின்ற நாடுகளில வாழ்ந்தாலும், சொந்த ஊரில வெடவெடக்கிற பனிக்குளிரில, வயல் வரம்புகளில் நடக்கையுக்குள்ள, புல்லில இருந்து சொட்டிக்கொண்டிருக்கிற பனித்தண்ணியில கால் படேக்கை கிடைக்குமே ஒரு சில்லிட்ட உணர்வு. அது சொந்த நாட்டை தவிர வேறெந்த நாட்டிலையும் கிடைக்காத சொர்க்கம்.
அனுபவம், நினைவு comments (3)

Tuesday, February 16, 2010
ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தை தமிழ் திரையுலகின் புதிய சிகரம்
நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
“தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே”
ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தை தமிழ் திரையுலகின் புதிய சிகரம்
Sunday, February 14, 2010
அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்திரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்."
அந்த நபர் கண்களை மெள்ளத் திறந்தார். "ஆமாம்....ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்.... மன்னிக்கவும்"
அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.
அந்த எழுத்தாளர் 'செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்' என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது.
இன்னொரு நிகழ்ச்சி. கராத்தே, குங்·பூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி படைத்த ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்து விட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவன் வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமானதால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கி சென்றதைக் கண்டு நிதானித்தார்.
அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார். "உனக்கு என்ன பிரச்சனை?"
அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது. அவர் தோளில் சாய்ந்து கொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தன் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பது எந்தப் பிரச்சனையையும் வளர்த்துமேயொழிய குறைக்காது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணிகளிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும், அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.
அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார். "அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிடம் போயிருக்கா விட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலை போன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னாலேயே மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்திரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும், கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை."
முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள்.
நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும் போது புரிந்து கொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது.
எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
சில நேரங்களில் .....

Subscribe to:
Posts (Atom)